Basics-அடிப்படை

ஜாதக பலன்கள் ஆராயும் அடிப்படை.


1.  லக்னம் எவ்வளவு பலம், ராசி எவ்வளவு பலம், எது பலம் என்று தெரிந்து கொள்வது முதல் ஆய்வு.

2.இயற்கையாக சுப, அசுப கிரகங்களின் அளவீடு இருந்தாலும், உண்மையிலேயே அவை ஒரு ஜாதகருக்கு உதவுமா என்ற இரண்டாம் ஆய்வு.

3.   ஜாதகத்தில் மொத்தம் எத்தனை கிரகங்கள் சாதகம் எத்தனை கிரகங்கள் பாதகம் என்பதை தெரிந்து கொள்வது மூன்றாம் ஆய்வு. 

4.    ஜாதக பல நிர்ணயம் எப்படி என்பதை அறிய எத்தனை சுப கிரகங்கள் கெட்டு எதிர்மறை பலனை செய்வார்கள் எத்தனை அசுபகிரகங்கள் கெட்டு நேர்மறை பலனை செய்வார்கள் என்ற நான்காம் ஆய்வு.

5.    ஜாதகத்தில் நடப்பு திசை , புக்தி, அந்தரம், ஜாதகருக்கு சாதகமா இல்லையா என்ற ஐந்தாம் ஆய்வு. 

6.   யோகம் அனுபவிக்க வயது இருக்கிறதா என்ற ஆறாம் ஆய்வு.

7.   ஜாதகரின் ஆயுள் காலம் மற்றும் பிராப்தம் என்ன என்ற ஏழாம் ஆய்வு.

ஆக மிக குறைந்த பட்சம் இந்த ஆய்வுகள் செய்த பின்புதான் ஒரு ஜாதகரின் பலன் சொல்லப்படவேண்டும்.

இதில் எதாவது ஆய்வு செய்யப்படவில்லை என்றால் ஜாதகருக்கு துல்லியமான பலன் சொல்ல இயலாது.