லக்னாதி யோகங்கள்

Ascendant - லக்ன பலன் - லக்னாதி யோகங்கள் - உயிர் ஸ்தானம் 


ஜோதிடத்தில் லக்னம் என்பது உயிர் ஸ்தானமாக கருதப்படுகிறது. 
லக்னம் என்றால் என்ன என்பது தெரிந்திருந்தால் இந்த பகுதி சுலபமாக புரியும்.

அடிப்படை குறிப்பு :

1.  லக்னத்தில் சுப கிரகங்கள் இருக்கலாம். பாப கிரகங்கள் இருந்தால் நல்ல குரு பார்க்க பலமே. குரு ஜாதகத்தில் கெட்டு போனவரானால் பார்த்து பலன் இல்லை.

2.  லக்னாதிபதி சுபராகி மறைவு ஸ்தானத்தில் ( லக்னத்தில் இருந்து 6,8,12 ஆம் வீடுகள் ) அமருவது அசுபம் . அதே லக்னாதிபதி பாபராகி மேற்கண்ட இடங்களில் அமரலாம்.

3. லக்னம் மற்றும் ராசிக்கு முன் பின் கிரகம் அமைவது விசேடம். (பன்னிரண்டு மற்றும் இரண்டாம் வீட்டில் )

4. லக்னாதிபதி லக்னத்தை பார்ப்பது  பலம். லக்னத்தில் ராகு கேது மாந்தி இல்லாதது பலம்.

5. லக்னாதிபதி அம்சத்தில் கிரக யுத்தம், மறைவு ஸ்தானம்,  பகை நீச்ச வீடுகளில் இருப்பது.